முதல்வர் ரேஸ்
மே மாதம் நடைபெற உள்ள கர்நாடகா தேர்தலில் முதல்வர் பதவிக்கான ரேஸில் தானும் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இன்று உறுதிபடத் தெரிவித்தார். முதல்வராக வேண்டும் என்ற ஆசை, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருடனான உடன்பாடு, தேர்தலுக்கான காங்கிரஸின் ஆயத்தங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து சித்தராமையா விரிவாகப் பேசினார்.
பிரபல செய்தி நிறுவனத்திற்கு சித்தராமையா அளித்த பிரத்யேக பேட்டியில், “100 சதவீதம் நான் முதல்வர் ரேசில் உள்ளேன். இப்போது இருக்கும் நிலையில், முதல்வர் ஆசையில் நானும், டி.கே. சிவகுமாரும் உள்ளோம். ஜி. பரமேஸ்வரா பற்றி எனக்குத் தெரியாது. ஆனால். அவர் கடந்த காலத்தில் தனது லட்சியங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை.”
மாநில தலைவர் டி.கே.சிவகுமாருடனான உறவு
டி.கே.சிவகுமாருடனான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த சித்தராமையா, “காங்கிரஸ் முற்றிலும் ஒற்றுமையாக உள்ளது. அவரும் முதல்வராக ஆசைப்பட்டவர்களில் ஒருவர். அதில் தவறில்லை. இறுதியில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்தான் சட்டப்பேரவைத் தலைவரைத் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.
சித்தராமையா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “காங்கிரஸ் ஒருபோதும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காது, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் தலைமையின் முடிவிற்கு விடுகிறோம்” என்றார்.
இரண்டு தொகுதிகளில் போட்டி
மைசூர் வருணா தொகுதியில் போட்டியிட சித்தராமையாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இருப்பினும் கோலார் தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அவர் நேற்று மீண்டும் தெரிவித்தார். பொதுவாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது சித்தராமையாவின் வழக்கமாக உள்ளது.
கர்நாடகா தேர்தல்: உபி மாடலை கையிலெடுக்கும் பாஜக.. ராமர் கோயில் கைகொடுக்குமா.?
மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடகத் தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கிங்மேக்கர் பாத்திரத்தை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 10-ம் தேதி நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தல் தான் தனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று சித்தராமையா மீண்டும் கூறினார். ஆனால் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்தார்.
களத்திற்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி நேற்று கர்நாடக தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது, அதில் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், உள்ளூர் மக்களுக்கு வேலைகளில் 80 சதவீத இடஒதுக்கீடு, ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு வேலைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 10 உத்தரவாதங்களை அளித்தது.
திருப்பதியில் ஏப்ரல் 1 முதல்… மீண்டும் வருகிறது அலிபிரி இலவச தரிசன டோக்கன்!
கர்நாடக சட்டசபை தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட தயாராகி வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி, ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதாகவும் உறுதியளித்துள்ளது.