சென்னை: பத்து தல படத்தின் முதல் பாகம் முழுவதுமே சிம்புவுக்கான வெறும் பில்டப் மட்டுமே சொல்லப்பட்டு ரசிகர்களை கடுப்பேற்றி விட்டார் இயக்குநர் கிருஷ்ணா என சிம்பு ரசிகர்கள் ஒரு பக்கம் காண்டாகி புலம்பி வருகின்றனர்.
பத்து தல என டைட்டிலை பார்த்ததுமே சிம்பு இந்த படத்தில் பத்து கெட்டப்பில் வந்து படம் முழுக்க நிறைந்து இருப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, விக்ரம் படத்தில் கமல் போர்ஷனை விட கம்மியான போர்ஷன் தான் சிம்புவுக்கு என தெரிந்ததுமே அப்செட் ஆகி விட்டனர்.
பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படி இருக்கு என்றும் சிம்பு ரசிகர்களை எங்கே ஏமாற்றினார்கள் என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..
கன்னட பட ரீமேக்
சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரியை வைத்து நெடுஞ்சாலை படத்தை இயக்கினார். அதன் பிறகு, அவருக்கு படம் இயக்கும் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இந்நிலையில், கன்னட படமான மஃப்டி படத்தை கவுதம் கார்த்திக்கை வைத்து இயக்கி உள்ளார். அப்போது அந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்த ரோலில் நடிக்க தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் யாருமே சம்மதிக்காத நிலையில், சிம்பு அந்த படத்தில் கமிட் ஆனார்.
ஹீரோ யாரு
சிம்பு தான் இந்த படத்தின் ஹீரோ என ப்ரோமோட் செய்யப்பட்டு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா எல்லாம் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆனால், இந்த படத்தில் சிம்பு வெறும் கேமியோ ரோலில் தான் நடித்துள்ளார் என்றும் கவுதம் கார்த்திக் தான் ஹீரோ என்றும் அவருக்குத்தான் பிரியா பவானி சங்கர் ஜோடி என்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு தற்போது இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க பில்டப்
முதல் சீனில் சிஎம் கடத்தப்பட்ட நிலையில், லாங் ஷாட்டில் ஏஜிஆர் சிம்பு அடுத்த சிஎம்மை ஆட்சியில் அமர வைத்த நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்லும் காட்சி இடம்பெறுகிறது. அதன் பிறகு ஏஜி ராவணனுக்கான கதாபாத்திர பில்டப்புகள் முதல் பாதி முழுக்க நிறைந்து கிடக்கிறது. மணல் மாஃபியா டானான அவரது லாரி செல்ல ரெட்டின் கிங்ஸ்லி ரயிலை எல்லாம் நிறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பாதி தல
ஏஜிஆர் ஆட்டத்தை அடக்க அண்டர் கவர் போலீஸாக கவுதம் கார்த்திக் எந்தவொரு சஸ்பென்ஸும் இல்லாமல் போலீஸாரால் அனுப்பப்படுகிறார். முதல் பாதி முழுக்கவே அவரது நடிப்புத் தான் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. முதல் பாதி முடிவில் தான் ஹெலிகாப்டரில் இருந்து சிம்பு வந்திறங்கும் காட்சியே வருவதால் பத்து தல படத்தில் வெறும் பாதி தலையாகவே சிம்பு இருக்கிறாரே என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
ஹெலிகாப்டருக்கு வந்த சோதனை
ஹெலிகாப்டரில் படு மாஸாக சிம்பு இறங்கி கேஜிஎஃப் படத்தில் முகத்தை காட்டியது போல காட்டுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெறும் சிம்புவின் கால் மட்டுமே மிஷ்கின் படம் போல காட்டப்பட்டது மேலும், கடுப்பை கிளப்பி உள்ளது. என்னடா இது ஹெலிகாப்டருக்கு வந்த சோதனை என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.