சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் பத்து தல. மஃப்டி என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்நிலையில் பத்து தல படம் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் மக்கள் தங்களின் பிள்ளைகளுடன் வந்துள்ளனர். டிக்கெட் எடுத்த நிலையில் தியேட்டருக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Ajith: எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக் கூறிய நடிகர் அஜித்!
இதையடுத்து அங்கு திரண்ட ரசிகர்கள் தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து படம் பார்க்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறுது. ரோகிணி தியேட்டரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது.. என குறிப்பிட்டுள்ளார்.
Pathu Thala Review: சிம்புவின் பத்து தல படம் எப்படி? விமர்சகர்களின் அதிரடி விமர்சனம்!
இதனிடையே நரிக்குறவர் இன மக்களுக்கு திரையரங்கில் அனுமதிக்கப்பட்டது குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பத்து தல படம் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், நரிக்குறவர் மக்கள், தங்களின் குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. மேலும் அவர்கள் தியேட்டருக்குள் படம் பார்க்கும் வீடியோவையும் ஷேர் செய்துள்ளனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோருடனோ அல்லது அடல்ட்டுகளுடனோ பார்க்கலாம் எனக் கூறி ரோகிணி தியேட்டரின் விளக்கத்திற்கு பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், 5 வருடத்திற்கு முன்பு வெளியான மெர்சல் படமும் யு/ஏ படம்தான், அந்த படத்திற்கு மட்டும் ஏன் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் காட்சி திரையிட்டீர்கள் என கேட்டு விளாசியுள்ளனர்.
PathuThala: இதான் ஹெலிகாப்டர்ல வர்றதா? மரண பங்கமாகும் கூல் சுரேஷ்!