எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
சிம்பு நடித்துள்ள பத்து தல படம் வெளியாகியுள்ள நிலையில் அப்படத்தின் விமர்சனத்தை பிரபல விமர்சகர்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
பத்து தலஒபலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் பத்து தல. இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளியாகி ஹிட்டடித்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் சிம்புவின் பத்து தல. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Ponniyin Selvan 2: வஞ்சகம் தீர்க்கும் கண்கள்… ‘பொன்னியின் செல்வன் 2’ ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள்!
பட்டாசுஏற்கனவே இப்படத்தின் ராவடி பாடல் வெளியாகி யூட்யூப்பில் வியூஸ்களை குவித்து வருகிறது. ராவடி பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகியுள்ளார் நடிகை சாயிஷா. இந்நிலையில் பத்து தல படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள், மேளதாளம், பட்டாசு என கொண்டாடி வருகின்றனர்.
PathuThala: இதான் ஹெலிகாப்டர்ல வர்றதா? மரண பங்கமாகும் கூல் சுரேஷ்!
மாஸ் என்ட்ரிஇந்நிலையில் பிரபல விமர்சகர்கள் பலரும் பத்து தல படம் குறித்த தங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, பிரபல விமர்சகரான ராஜசேகர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பத்துதல முதல் பாதி – தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நன்றாக உள்ளது. நிழல் உலகம் அரசியல் சதியுடன் நன்றாக வேலை செய்கிறது. கௌதம்_கார்த்திக் தீவிரமாக உள்ளார். சிம்பு இடைவேளையில் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார்! கவுதம் மேனன் மீண்டும் இம்ப்ரஸ் செய்துவிட்டார். கன்னியாகுமரி பேச்சுவழக்கு பர்ஃபெக்ட்டாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Pandian Stores: ‘6 மாசம் என் கூட’… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையிடம் டீல் பேசிய இயக்குநர்!
ஆவ்ரேஜ் படம்இதேபோடல விமர்சகர் சினி முருகன் பதிவிட்டுள்ள டிவிட்டில், பத்து தல- எஸ்டிஆரின் இன்டர்வல் பிளாக் மற்றும் ஏஆர் ரஹ்மானின் இசை நன்றாக உள்ளது. சில காட்சிகள் மட்டும்தான் நன்றாக உள்ளது. ஆவ்ரேஜ் திரைப்படம்தான்.
பத்து தல படம் சிலம்பரசன் டிஆரின் ஆக்ஷன் ட்ரீட் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பத்து தல படத்திற்கு 2.75/5 ரேட்டிங் கொடுத்துள்ளார் சினி முருகன்.
Gautham Karthik: என் பொண்டாட்டி குண்டா இருந்தா உங்களுக்கு என்ன? கடுப்பான கவுதம் கார்த்திக்!
பர்ஃபெக்ட் இண்டர்வெல்இதேபோல் பிரபல யூட்யூப் விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமியும் தனது விமர்சனத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதன்படி பத்து தல இண்டர்வெல் – பில்டப்ஸ் மற்றும் பர்ஃபெக்ட் இண்டர்வெல்… இரண்டாம் பாதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
‘நான் மாறிவிட்டேன்’ சமந்தா உருக்கம்!
முதல் பாதி சுவாரசியம்இதேபோல் பிரபல விமர்சகரும் ட்ரேட் அனாலிஸிஸ்டுமான ரமேஷ் பாலா பதிவிட்டுள்ள டிவிட்டில் , பத்து தல முதல் பாதியில் இடைவேளைக்கு முன்னால் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். எஸ்டிஆரின் அற்புதமான இண்டர்வெல் பிளாக்.. கவுதம் கார்த்திக்கிற்கு நல்ல வேடம்… அவர் நன்றாக நடித்துள்ளார். மணல் மாஃபியா இதுவரை சுவாரசியம்… இரண்டாம் பாதி வேற லெவலில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சாயிஷாவின் ராவடி பாட்டை ரசிகர்கள் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார் ரமேஷ் பாலா.
புகுந்த வீட்டிற்காக தியாகம் செய்யும் ஜோதிகா!
Pathu Thala Review