எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையாக நடித்திருந்தார் பார்த்திபன். அந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
பொன்னியின் செல்வன் படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தை ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். அந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் கூறியது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பார்த்திபன் பேசியதாவது,
என்னை போன்று அழகாக தமிழ் பேசுபவர்களுக்கு பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது மிகப் பெரிய விஷயம் ஆகும். அந்த சந்தோஷத்தில் தான் நெஞ்சில் வாள் ஏந்தி வந்திருக்கிறேன். ரசிகர்களை போன்றே நானும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் எப்படி இருந்தது என எனக்கு தெரியாது. ஏனென்றால் நான் முதல் பாகத்தை இன்னும் பார்க்கவே இல்லை. முதல் நாள் முதல் காட்சியை தஞ்சாவூரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்று அங்கு சென்றேன். ஆனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டதால் படத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது.
அதனால் முதல் பாகத்தில் என்ன இருந்தது என எனக்கு தெரியாது. மேலும் இரண்டாம் பாகத்தில் என்ன இருக்கிறது என்றும் தெரியாது. ஆனால் இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்பது மட்டும் எனக்கு மகிழ்ச்சி.
முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டினார்கள். எனக்க நல்ல பெயர் கிடைத்தது. அது இரண்டாம் பாகத்திலு் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
முதல் பாகம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. இரண்டாம் பாகம் அதை விட அதிகம் வசூல் செய்யும் என்று நம்புகிறோம் என்றார்.
பொன்னியின் செல்வனில் நடித்தவரே அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லையா என ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் பார்க்க முடியாவிட்டால் என்ன அடுத்த நாள் பார்த்திருக்கலாம். இல்லை என்றால் அமேசான் பிரைமில் வந்தபோது பார்த்திருக்கலாமே. பார்த்திபன் வில்லங்கமானவர், குசும்புக்காரர் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Rajinikanth:ரஜினி மீது கோபம்: பொன்னியின் செல்வன் 2 விழாவுக்கு தலைவரை அழைக்காத மணிரத்னம்?
இதற்கிடையே பொன்னியின் செல்வன் 2 விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளாததற்கு புது காரணம் கூறப்பட்டது. ரஜினி மீது இருக்கும் கோபத்தால் அவரை பொன்னியின் செல்வன் 2 பட விழாவுக்கு மணிரத்னம் அழைக்கவில்லை என்று பேச்சு கிளம்பியது. ஆனால் அதில் உண்மை இல்லை.
ஜெயிலர் படப்பிடிப்பில் இருப்பதால் பொன்னியின் செல்வன் 2 பட விழாவில் ரஜினி கலந்துகொள்ளவில்லையாம்.