Ponniyin Selvan 2 Audio Launch: மணிரத்னம் ரொம்பவே ரொமேண்டிக்.. புகழ்ந்து தள்ளிய 80ஸ் கதாநாயகிகள்

சென்னை: Ponniyin Selvan 2 Audio And Trailer Launch: அவர் ரொம்பவே ரொமேண்டிக் என நடிகை சுஹாசினி கூற இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் வெட்கப்பட்டார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலித்த அந்தப் படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று ரசித்தனர்.

ரிலீஸுக்கு தயார் நிலையில் பொன்னியின் செல்வன் 2

முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீஸாக இருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படமும் உலகளவில் வசூல் சாதனை செய்யும் என ரசிகர்களும், படக்குழுவும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கமல் ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கமல் ஹாசன் ட்ரெய்லரை வெளியிட்டார். பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதற்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.

மேடையில் பேசிய 80ஸ் கதாநாயகிகள்

மேடையில் பேசிய 80ஸ் கதாநாயகிகள்

கமல் ஹாசன், சிம்புவை தவிர்த்து பாரதிராஜா மற்றும் 80களில் பிரபல ஹீரோயின்களாக இருந்த குஷ்பூ, சுஹாசினி, ரேவதி, ஷோபனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய குஷ்பூ, “அனைவருக்கும் வணக்கம். மணிரத்னம் பற்றி நான் பேசணும்ன்னா சுஹாசினி காதை மூடிக்கிடனும். நான் மணி சார் பத்தி பேசுனா எனக்குள்ள ஹார்ட்டின் பறக்கும். அவரோட படத்துல எனக்கு பிடித்தமான படம் மௌன ராகம். பெஸ்ட் பாடல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி( தளபதி). இன்னும் சொல்லிக்கொண்டே போலாம். பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமா வரலாற்றை மாற்றியுள்ளது” என்றார்.

மணிரத்னம் ரொமேண்டிக்கானவர்

மணிரத்னம் ரொமேண்டிக்கானவர்

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, “மணிரத்னன் ரொம்ப ரொமேண்டிக். அவர் படத்தில் நடித்த கதாநாயகிகள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நான் அவரோட ரியல் லைஃப் கதாநாயகி. நான் எப்படி இருப்பேன் என நீங்களே நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு பிரமாண்டமான படம் எப்படி எடுத்தீர்கள் என கேட்டால் இதெல்லாம் தூசு என கூறினார். எனக்கு மிகவும் பிடித்தமான படம் நாயகன்தான், அதில் என் சித்தப்பா கமல் நடித்துள்ளார் அதனால்தான். அதனை தொடர்ந்து எனக்கு பிடித்த படம் பொன்னியின் செல்வன்தான்” என தெரிவித்தார்.

ரேவதியின் பேச்சு

ரேவதியின் பேச்சு

குஷ்பூ, சுஹாசினயை அடுத்து மேடையில் பேசிய ரேவதி, “நான் நடிக்க வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய 40வது வருடத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் பிடித்த படம் இருவர், அந்த படத்தில்தான் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக அறிமுகமானார்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.