எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் படத்தில் தலை காட்டினாலே போதும் என பலர் தவம் இருக்கின்றனர். ரஜினியின் படத்தில் நடித்தால் நமக்கும் பிரபலம் கிடைக்கும், பல வாய்ப்புகள் வரும் என்பதற்காக அவருடன் இணைந்து நடிக்க ஆவலாக இருந்து வரும் நடிகர்கள் மத்தியில் ரஜினியின் படத்தால் வாய்ப்புகளை இழந்தேன் என ஒரு நடிகை கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கின்றது.
தமிழ், கன்னட, ஹிந்தி என பல மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்த மனிஷா கொய்ராலா ரஜினியின் பாபா திரைப்படத்தால் வாய்ப்புகளை இழந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் என மிகப்பிரமாண்டமான படங்களில் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருந்தார் மனிஷா கொய்ராலா.
Pathu thala: விஜய் – அஜித்திற்கு பிறகு சிம்பு செய்த சாதனை..கெத்து காட்டும் பத்து தல..!
தமிழில் மட்டுமல்லாது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து செம பிசியாக இருந்து வந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு ரஜினியின் பாபா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
படையப்பா என்ற மிகப்பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு ரஜினி நடிக்கும் படம் என்றும், பாட்ஷா படத்தை இயக்கிய இயக்குனருடன் ரஜினி மீண்டும் கைகோர்க்கின்றார் என்றும் இவ்வாறு பல விஷயங்களினால் பாபா திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சொல்லப்போனால் பாபா திரைப்படம் கடுமையான நஷ்டத்தையே சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் சில பல சர்ச்சைகளிலும் சிக்கியது பாபா. இந்நிலையில் அதுவரை தமிழில் டாப் நாயகியாக வலம் வந்த மனிஷா கொய்ராலா பாபா திரைப்படத்தினால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, ரஜினியின் பாபா திரைப்படம் படுதோல்வியடைந்ததை அடுத்து எனக்கு தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குறைந்தன. மேலும் பாபா திரைப்படம் தான் நான் கடைசியாக நடித்த தமிழ் படம் என மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார் மனிஷா.
இந்நிலையில் பல நடிகைகள் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என இன்றளவும் ஆசைப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் படத்தால் வாய்ப்புகளை இழந்ததாக மனிஷா கொய்ராலா கூறியுள்ளது ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பாபா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.