எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் அபி படம் மூலம் நடிகையானவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா. சிம்புவின் குத்து படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கிரி, தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
குத்து படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்ததால் அவரை குத்து ரம்யா என ரசிகர்கள் அழைக்கிறார்கள். ரம்யா தற்போது கன்னட படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு காங்கிரஸின் சோஷியல் மீடியா பிரிவின் தேசிய தலைவராக்கப்பட்டார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தார் ரம்யா.
இந்நிலையில் Weekend with Ramesh நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்றார் ரம்யா. இந்த சீசனின் முதல் சிறப்பு விருந்தாளி ரம்யா தான். அந்த நிகழ்ச்சியில் தன் வாழ்க்கை பற்றி பேசியிருக்கிறார்.
ரம்யா பேசியதாவது,
என் தந்தை ஆர்.டி. நாராயண் இறந்த இரண்டு வாரங்கள் கழித்து நான் நாடாளுமன்றத்திற்கு சென்றேன். எனக்கு எதுவும் தெரியாது, யாரையும் தெரியாது. நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றி கூட தெரியாது. ஆனால் நான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். என் துக்கத்தையும் தாண்டி வேலையில் கவனம் செலுத்தினேன்.
மாண்டியா தொகுதி மக்கள் தான் எனக்கு அந்த நம்பிக்கையை அளித்தார்கள். என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அம்மா. அதன் பிறகு என் அப்பா. மூன்றாவது ராகுல் காந்தி. என் தந்தை இறந்தபோது மோசமான நிலையில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன்.
எந்த பற்றும் இல்லாமல் இருந்தேன். தேர்தலிலும் தோல்வி அடைந்தேன். அது மோசமான நேரம். கவலை மட்டும் தான் இருந்தது. அந்த நேரத்தில் தான் ராகுல் காந்தி எனக்கு உதவி செய்தார். எமோஷனலாகவும் ஆதரவாக இருந்தார் என்றார்.
Rajinikanth:ரஜினி மீது கோபம்: பொன்னியின் செல்வன் 2 விழாவுக்கு தலைவரை அழைக்காத மணிரத்னம்?
ரம்யா சொன்னதை கேட்ட ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
வாழ்க்கையில் பிரச்சனை வரும் போகும். அதற்காக தற்கொலை செய்து கொள்ள நினைக்கக் கூடாது ரம்யா. நீங்கள் ரொம்ப தைரியமானவர் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். சந்தோஷமாக வாழுங்கள் என தெரிவித்துள்ளனர்.
சினிமா கெரியரில் உச்சத்தில் இருந்தபோது தான் ரம்யா அரசியல் பக்கம் சென்றார். 2019ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சோஷியல் மீடியா பிரச்சார குழு தலைவராக இருந்தார் ரம்யா. அந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு ஆதரவாக இல்லை. இதையடுத்து சோஷியல் மீடியா பிரிவு மற்றும் அரசியலை விட்டு விலகினார்.
சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த ரம்யா ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். உத்தரகாண்டா கன்னட படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.