தமிழ் சினிமாவில் பல விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் இன்றளவும் ரசிகர்களின் ஆதரவை விடாமல் தக்க வைத்து கொண்டிருப்பவர் என சிம்புவை சொல்லலாம். அந்தளவிற்கு சர்ச்சைகள் இவரை சுற்றி வலம் வந்துள்ளது. தற்போது மீண்டும் சினிமாவில் மறு பிரவேசம் எடுத்துள்ள சிம்பு அதிரடி காட்டி வருகிறார். இந்நிலையில் சிம்பு குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ள மீம்ஸ் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
‘மாநாடு’ படத்திற்கு முன்பு வரை பல சர்ச்சைகளில் சிக்கினார் சிம்பு. படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வருவதில்லை. தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. பாத்ரூமில் வைத்து டப்பிங் பேசினார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சிம்பு மீது சுமத்தப்பட்டது. குறிப்பாக உடல் எடை கன்னாபின்னாவென்று அதிகரித்து, சிம்புவின் கெரியர் அவ்வளவு தான் என்றளவில் விமர்சனங்கள் பறந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனையடுத்து தான் ‘மாநாடு’ படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார் சிம்பு. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவுக்காக திரையில் தோன்றி மாஸ் காட்டினார். ‘மாநாடு’ படமும் அதிரிபுதிரியான வெற்றியை சுவைத்தது. அந்தப்படத்தை தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படமும் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் தான் தற்போது ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது. இதில் பேசிய சிம்பு, நான் வேறு மாதிரியாக வந்து இருக்கேன். இனிமேல் எனக்காக நீங்க சண்டை போட வேண்டாம். சும்மா ஜாலியாக கால் மேல் கால் போட்டு நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க என எமோஷனலாக ரசிகர்களிடம் கூறியிருந்தார் சிம்பு.
Iswarya Menon: பிரபல நடிகையை காதலிக்கும் ஐஸ்வர்யா மேனன்: தீயாய் பரவும் புகைப்படம்.!
அவரின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் படு வைரலானது. ரசிகர்கள் ஒரு பக்கம் அவரது பேச்சை கொண்டாடினாலும், மறுப்பக்கம் விமர்சனங்களும் எழுந்தது. ‘யாரோ நம்ம வீழ்ச்சிக்காக நமக்கு எதிரா வேலை செய்றாங்கன்னு சிம்பு ஆழமா நம்புறாரு. அது உண்மையும் கூடத்தான். அது வேற யாரும் இல்லை. சிம்பு தான்’ என்பதை போல பல கமெண்ட்களும், மீம்ஸ்களும் இணையத்தில் வைரலானது. அப்படி ஒரு மீம்ஸ்சை தான் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், என்னோட வளர்ச்சியை தடுக்குறாங்க. என்னை ஷுட்டிங் போக விடாம பண்றாங்க. இனிமே எல்லார் கதையும் குளோஸ். நான் வந்துட்டு இருக்கேன் என சிம்பு சொல்வதை போலவும், கடைசியில் பார்த்தால் இதையெல்லாம் செய்வதே சிம்பு தான் என்பதை போலவும் அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தான் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் பலரும் வழக்கம்போல அவரை திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.
Vijay: போடு வெடிய.. வெற்றிமாறனுடன் இணையும் தளபதி: முரட்டு சம்பவம் லோடிங்.!