Vijay: விஜய்யே இப்படி சொல்லிட்டாரே ? உச்சகட்ட வருத்தத்தில் பிரபல இயக்குனர்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்

​ஆரம்பம் தளபதியாக தமிழ் சினிமாவில் வலம் வரும் விஜய் ஆரம்பகாலகட்டத்தில் பல போராட்டங்களை சந்தித்து தான் இந்த நிலையை அடைந்துள்ளார். இவரின் முதல் படம் வெளியானபோது இவரை விமர்சிக்காத ஆட்களே இல்லை எனலாம். ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் விஜய். இருப்பினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து ஒரு வெற்றிக்காக காத்துக்கொண்டிருந்தார் விஜய். அந்த சமயத்தில் தான் விஜய்க்கு விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது

​காதல் படங்கள் பூவே உனக்காக படத்தின் வெற்றி விஜய்யை பட்டிதொட்டி எங்கும் எடுத்து சென்றது. அதன் பிறகு அவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவானது. எனவே தொடர்ந்து காதல் படங்களாக நடித்து விஜய் தன் ரசிகர்கள் வட்டாரத்தை பெருக்கினார். லவ் டுடே, காதலுக்கு மரியாதை, குஷி என விஜய் தொடர்ந்து காதல் படங்களிலேயே நடித்து வந்தார். அப்படங்கள் அவருக்கு வெற்றிகளை குவித்து தந்தன. இதன் காரணமாக அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்களும் இருந்தனர். கிட்டத்தட்ட 1996 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை விஜய் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்

​ஆக்ஷன் அவதாரம் தொடர்ந்து காதல் படங்களாக நடித்து வந்த விஜய் பகவதி, திருமலை போன்ற படங்களின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஒரு மாஸ் ஹீரோவாக விஜய் உருவானார். இப்படங்களுக்கு பிறகு இனி ஆக்ஷன் தான் என முடிவெடுத்த விஜய் கில்லி, திருப்பாச்சி , சிவகாசி, போக்கிரி என தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உயர்ந்தார். அந்த ஆக்ஷன் படங்கள் தான் அவரின் நட்சத்திர அந்தஸ்தையும்,சம்பளத்தையும், ரசிகர்களின் பட்டாளத்தையும் பெருகியது. தற்போது இந்திய சினிமாவிலேயே உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக விஜய் இருக்கின்றார் என்றால் அதற்கு அவர் நடித்த ஆக்ஷன் படங்கள் தான் காரணம் எனலாம்
​வருத்தம் இந்நிலையில் பிரபல இயக்குனரும், நடிகருமான A .வெங்கடேஷ் விஜய்யின் மீது வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது விஜய்யை வைத்து செல்வா, நிலவே வா, பகவதி என மூன்று படங்களை இயக்கியவர் தான் வெங்கடேஷ். பகவதி என்ற படத்தின் மூலம் காதல் நாயகனாக வலம் வந்த விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றினார் வெங்கடேஷ். ஆனால் விஜய் திருமலை படத்தின் மூலம் தான் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார் என பொதுவாக பலர் பேசி வருகின்றனர். அவ்வளவு ஏன் விஜய்யே ஒரு சில பேட்டிகளில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது திருமலை படம் தான் என கூறியுள்ளார். இதன் காரணமாக வருத்தத்தில் வெங்கடேஷ் இருப்பதாக தெரிவித்துள்ளார். விஜய்யே இப்படி பேசியது தான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது என வெளிப்படையாகவே கூறியுள்ளார் வெங்கடேஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.