வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வரும் நிலையில், அவரது நெருங்கிய கூட்டாளி கைது செய்யப்பட்டார்.பஞ்சாபில், ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் வாயிலாக, மத தீவிரவாத பிரசாரத்தில் அம்ரித்பால் சிங் ஈடுபட்டு வந்தார். மேலும், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கும் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட தன் ஆதரவாளரை மீட்க, காவல் நிலையத்துக்குள் நுழைந்து, அம்ரித்பால் சிங் வன்முறையில் ஈடுபட்டார்.இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்த போது, அவர் கடந்த 18ல் தப்பி ஓடினார்.
அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியும், அவரது கார் டிரைவருமான ஜோகா சிங் என்பவரை, லுாதியானா அருகே சோனேவால் என்ற இடத்தில் போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். முதற்கட்ட விசாரணை போலீசாரை ஏமாற்ற, தன் மொபைல் போனை ஜோகா சிங்கிடம் கொடுத்து, இருப்பிடத்தை அடிக்கடி மாற்றும்படி அம்ரித்பால் சிங் கூறியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வைத்து அம்ரித்பால் சிங்கை பிடிக்கும் முயற்சியில், பஞ்சாப் போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
Advertisement