தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அவர் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 23 புதிய அறிவிப்புகளை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டுள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சென்னை மற்றும் மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்பின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும். தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக கோயம்புத்தூர் மண்டல வளாகத்தில் புதிய கல்விக் கட்டடம் ரூ.15.51 கோடி செலவில் கட்டப்படும். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கூடுதல் உணவகக்கூடம் ரூ.5.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதியதாக கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.10 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
newstm.in