ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார்


பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ஆறு வாரத்தில் மட்டும் விமான பயணத்திற்காக 500,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளது தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் விமான சேவை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்டர் விடுமுறைக்கு செல்லவிருக்கும் நிலையில், தற்போது ரிஷி சுனக் செலவிட்ட தொகை தொடர்பில் தகவல் கசிந்துள்ளது.
பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் எகிப்து, பாலி, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்தார்.

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் | Rishi Sunak Private Jets Shocking Waste Taxpayers

@getty

மொத்தம் 6 வாரங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த பயணங்களுக்காக தனியார் விமான சேவையை ரிஷி பயன்படுத்தியுள்ளார்.
எகிப்தில் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட COP27 மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என அறிவித்திருந்த ரிஷி சுனக்,

அந்த மாநாட்டில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததும், உடனடியாக தமது முடிவை மாற்றிக்கொண்ட ரிஷி சுனக், தனியார் விமானத்தில் எகிப்து சென்றார்.

இதற்கான செலவு 107,966 பவுண்டுகள் எனவும், பிரதமரின் தனிப்பட்ட செலவுகள், (விசா, தங்குமிடம், பயணம் மற்றும் உணவு உட்பட) 3,483 பவுண்டுகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் | Rishi Sunak Private Jets Shocking Waste Taxpayers

@PA

தொடர்ந்து G20 மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்கள் பயணமாக பாலி சென்றார்.
அதற்கான விமான செலவு 341,857 பவுண்டுகள் எனவும், பிரதமரின் தனிப்பட்ட செலவு 11,204 பவுண்டுகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

35 அதிகாரிகளுடன் பாலி பயணம்

கடந்த டிசம்பர் மாதம் சிறப்பு கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு லாத்வியா மற்றும் எஸ்டோனியா சென்றிருந்தார்.
விமான பயணத்திற்காக பொதுமக்கள் வரிப்பணத்தில் 62,498 பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது தனிப்பட்ட செலவுகள் என 2,500 பவுண்டுகள் செலவாகியுள்ளது.

பாலி பயணத்தின் போது தம்முடன் 35 அதிகாரிகளை அழைத்துச் சென்றுள்ளார் ரிஷி சுனக்.
அவருடன் சென்ற ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் சொந்த செலவில் பாலி சென்றுள்ளனர்.

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் | Rishi Sunak Private Jets Shocking Waste Taxpayers

@PA

தனியார் விமானம் ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் முன்பதிவு செய்திருந்தாலும், அது அரசாங்க விமானம் போன்றே கொடி பொறிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வரிப்பணத்தில் வீண் செலவுகளை ஏற்படுத்துவதாக ஏற்கனவே ரிஷி சுனக் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.