இந்தி வார்த்தை அழிப்பு… அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு – கிளம்பும் புது பிரச்னை

சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்தி வார்த்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு மையால் அழித்துள்ளனர். இதனையொட்டி, ரயில்வே சட்டம் பிரிவு 166- ரயில்வே துறைக்கு சொந்தமான பெயர் பலகையை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் கடற்கரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 

பறக்கும் ரயில் செல்லும், சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தின் ஐந்தாவது நடைமேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லையென்பதால், அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.