ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றப்பட உள்ளன. என்ன விதிகள் மாறுகின்றன மற்றும் அதன் தாக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
1. 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தொடர்பான மாற்றங்கள் இன்று ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும். முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. இப்போது புதிய வரி விதிப்பில் வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள ஊழியர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
2. இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஹால்மார்க் பிரத்யேக அடையாள எண் இல்லாமல் தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நுகர்வோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு, மார்ச் 31, 2023க்குப் பிறகு, HUID ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.
3. சந்தையுடன் இணைக்கப்பட்ட கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்வது குறுகிய கால மூலதனச் சொத்தாக கருதப்படும்.
4. இன்று ஏப்ரல் 1 முதல், கடன் பரஸ்பர நிதிகளுக்கு LTCG வரியின் பலன் வழங்கப்படாது. குறுகிய கால ஆதாயங்களில் 35 சதவீதத்திற்கும் குறைவான பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் வரி விதிக்கப்படும்,. இது முன்பு விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில் இருந்தது.
5. இன்று ஏப்ரல் 1-ம் தேதி முதல் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்திற்கு பதிலாக ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். இது தவிர, மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வரம்பு ரூ.4.5 லட்சத்துக்குப் பதிலாக ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கின் கீழ் ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சமாகவும் இருக்கும். இந்த இரண்டு திட்டங்களும் மக்களுக்கு வழக்கமான வருமானத்தின் பலனை வழங்குகின்றன.
6. இன்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் KYC ஆவணங்களைப் பதிவேற்றுவதை கட்டாயமாக்கியுள்ளது. இது ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். NPS பயனர்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான படிவம், அடையாளம் மற்றும் முகவரி சான்று, வங்கி கணக்கு, PAN இன் நகல் போன்றவற்றை வழங்க வேண்டும்.
7. இன்று 2023-24 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கியின் முதல் நிதிக் கொள்கை அறிவிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8. ஆக்சிஸ் வங்கி சேமிப்புக் கணக்கிற்கான திருத்தப்பட்ட கட்டண அமைப்பு: ஆக்சிஸ் வங்கி, சேமிப்புக் கணக்கிற்கான கட்டணக் கட்டமைப்பை மாற்றப் போகிறது. இந்த மாற்றம் இன்று ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.