இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்கள்! மிலிந்த மொரகொட வலியுறுத்திய விடயம்


இராமாயணம் மற்றும் சீதை பாதைகளை இலங்கை நாடு அபிவிருத்தியினை மேற்கொண்டு வருவதாக
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இராம நவமி விழாவையொட்டி, மிலிந்த மொரகொட நேற்றைய தினம் (30.03.2023) மும்பையில் உள்ள
ராஜ்பவனில் மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்துள்ளார்.

மேலும், இலங்கை வளமானது. அழகான மென்மையான மற்றும் மணல் கடற்கரைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகள்
தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்றது என்றும்
பெரும்பாலானவை இராமாயணத்துடன் தொடர்பு கொண்டவை எனவும் மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்கள்! மிலிந்த மொரகொட வலியுறுத்திய விடயம் | Meeting With Milinda Morakoda Governor Ramesh Pais

பொருளாதார பரிவர்த்தனை

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய குறைந்தது 40 இடங்கள் உள்ளன.

அதில் ஐந்து சிவன் கோயில்கள். ஒன்று திருகோணமலையில் உள்ளதாகவும்
இராவணனால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது எனவும் மொரகொட
தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் விபீஷணன் வழிபட்ட பௌத்த விகாரை ஒன்றும் இருப்பதாகவும்
மொரகொட, மகாராஷ்டிரா ஆளுநரிடம் கூறியுள்ளார்.

இதேவேளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து, இலங்கை நாட்டில் சூரிய சக்தி
மின் நிலையத்தை அமைக்க உள்ளது எனவும், பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான
சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை விவாதித்து வருகிறது என்றும் மிலிந்த மொரகொட இச்சந்திப்பின் போது
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.