உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், உயிரைப்பறிக்கும் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
61 வயதான அந்த நபர், தொண்டை அழற்சி, சோர்வு, பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுடன் மருத்துவமனைக்குச்சென்றுள்ளார்.
சி.டி.ஸ்கேனில் அவரது கழுத்தின் வலது பக்கத்தில் சீழ் கட்டியிருந்தது தெரியவந்தது. சீழை எடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுக்கு அனுப்பியதில், தாவரங்களுக்கு ஏற்படும் “காண்ட்ரோஸ்டீரியம் பர்பூரியம்” ( Chondrostereum purpureum ) என்ற தாவர பூஞ்சை நோய் பாதித்திருந்தது தெரியவந்தது.
தாவர பூஞ்சையியல் ஆராய்ச்சியாளரான அந்த நபர் அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவர பூஞ்சைகளுடன் நீண்ட காலமாக புழங்கி வந்ததால், இந்நோய்க்கு ஆளாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாவரங்களில் “சில்வர் லீஃப்” (( Silver Leaf )) எனப்படும் நோயை ஏற்படுத்தும் இந்தக் கிருமிகள், மனிதனின் உயிரையே கொல்லும் அளவுக்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.