16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.
இந்நிலையில், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும். ராஜஸ்தான் அணி வலுவாக இருப்பதாகவும் டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சீசனில் ஒரு அணி தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்துவது பெரிய விஷயம். அதனால் யார் வெல்வார்கள் என சொல்வதும் கடினம். கடந்த ஆண்டு புதிய அணியான குஜராத் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த முறை இறுதிப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி இந்த முறை வலுவான அணியை அதனை அடிப்படையாக வைத்தே கட்டமைத்துள்ளது. ஏலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ராஜஸ்தான் வலுவாக உள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள யாஷ் துல் மற்றும் அமன் கான் ஆகியோருக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும் என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.