கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்குவதை அப்பகுதி மக்கள் வழங்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஒரு குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு கொசுவர்த்தி ஏற்றிவைத்து விட்டு அனைவரும் தூங்கிவிட்டனர். மறுநாள் காலை வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே செல்லும்போதே காவல் அதிகாரிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
உள்ளே சென்றதும் வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்தனர். வீட்டில் 6 பேரும் மூச்சு பேச்சு இல்லாமல் சரிந்து கிடந்தனர். இதையடுத்து அவர்கள் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வர்களது உடல்கள் கூராய்வுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவர்களது வீட்டில் சோதனை நடத்திய போது, கொசுவர்த்தி துகள்கள் அதிகமான இடங்களில் கிடைத்தது. அதனடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.
சம்பவத்தன்று அதிகமாக கொசுவர்த்தி ஏற்றி வைத்ததால் அதில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவை சுவாசித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
newstm.in