காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்வேதா(19) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்ட ஸ்வேதா, நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.