சென்னை: சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் கேட்டுள்ளது. நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்திற்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களுக்கு, ரோஹிணி தியேட்டரில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.