சென்னை: சென்னை மதுரவாயலில் தீபாவளி பட்டாசை நாட்டு வெடி போல்டேப் ஒட்டி வெடிக்க செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கங்கை அம்மன் நகரில் தீபாவளி பட்டாசை ஒன்றாக டேப் அடித்து நாட்டு வெடி போல் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி அசோக், அவரது கூட்டாளி சுரேஷ்குமார், விஜய், இளங்கோ ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
