மதுரை: டிசம்பர் 2022 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு விவரங்களை சமர்பிக்க ஆணையிட்டுள்ளனர். எத்தனை வழக்குகளில் அறிவுரை கழகத்தின் கருத்து பெறப்பட்டது என்பதை தெரிவிக்கவும் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. எத்தனை வழக்கில் குண்டர்சட்ட உத்தரவு உறுதியானது; எத்தனை வழக்கில் ரத்து என்பதை தெரிவிக்கவும் ஆணை. தன்மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய கணேஷ்குமார் என்பவரின் வழக்கு ஏப்.12க்கு ஒத்திவைத்துள்ளனர்.