டெல்லி: டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிய 6 பேர் கொசு விரட்டி மருந்தை சுவாசித்ததால் உயிரிழந்தனர். கொசு விரட்டியை எரித்ததில் வெளியான கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
