தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம்
ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, டேனியல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் குறித்த கதை என்ற தகவல் வெளியானதிலிருந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்கவயல் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்து தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் தன் கலந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த 29ம் தேதி நடந்தது. இதில் விக்ரம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவை முடித்த பின் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.