நாளை முதல் வருமான வரி விதியில் மாற்றம்!!

அண்மையில் பட்ஜெட்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வருமான வரி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வருமான வரி முறையை தேர்வு செய்வோர், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வருமான வரி முறையில் 50,000 ரூபாய் நிலையான விலக்கு (Standard deduction) வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 15000 ரூபாய் நிலையான விலக்கு வழங்கப்படும்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வருமான வரி முறையே இயல்பான வருமான வரி முறையாக இருக்கும். பழைய வருமான வரி முறைக்கு மாற விரும்புவோர் தங்கள் விருப்பத்தின் பேரில் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்துகொள்ளலாம்.

கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் கடன் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு (Debt mutual funds) ஏப்ரல் 1ஆம் தேதி முதல் லாபத்துக்கு வரி விதிக்கப்படும். 35% மேல் பங்குகளில் முதலீடு செய்யாத எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைக்கும் வெற்றி தொகைக்கு 30% டிடிஎஸ் (TDS) வரி விதிக்கப்படும்.

ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் செலுத்தினால், முதிர்வு தொகைக்கு (Maturity) வரி விதிக்கப்படும். இந்த விதிமுறை 2023 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் வாங்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.