
இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரியங்க சோப்ராவின் சூடேற்றும் படுக்கையறை காட்சிகளுடன் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய எபிசோடுகள , வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28 முதல் மே 25ஆம் தேதி வரை தொடர்ந்து வாரந்தோறும் வெளியிடப்படும். இந்த தொடரை ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ என்ற நிறுவனமும், ஷோ ரன்னரான டேவிட் வெய்லும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோருடன் ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சிட்டாடல் இணைய தொடர் வெளியாகிறது.