காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் சென்னையும் இரண்டாவது விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையின் பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரம்பூர் பகுதிகள் அமைய உள்ளது. இதற்கு ஏகநாதபுரம், பரந்தூர் 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் 248 வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ எழுதிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பரந்தூர் விமான நிலைய வரைபடத்தில் ஏகனாபுரம் கிராமமும் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்துள்ள தகவல், அக்கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அக்கிராம கருப்புக்கொடி ஏந்தி, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், அமைச்சரின் இந்த தகவல் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும், அவரின் அறிவிப்பை திரும்ப பெரும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் வருகின்ற திங்கட்கிழமை முதல் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.