மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை கோதண்டராமர் கோயில் நிலத்தில் கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டுவதை தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறை தகவல் அளித்துள்ளனர். கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு ஏப்ரல் 20க்கு ஒத்திவைத்துள்ளனர்.
