மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு'
'கீழக்காடு' மற்றும்' 'பற்றவன்' ஆகிய படங்களை தயாரித்ததோடு, 'கீழக்காடு' படத்தை இயக்கிய சத்தியமூர்த்தி ஜெயகுரு, தனது சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் 'ஆன்மீக அழைப்பு' திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு, முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
ஆதேஷ் பாலா, ரோஜா துரை ராமச்சந்திரன் மற்றும் புதுமுக நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் விமான பணிப்பெண் சுபிக்ஸா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் மேலும் ஐந்து புதுமுக நடிகைகளும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
உலகில் நடைபெறும் பல ஆச்சரியமான நிகழ்வுகளில் மறுபிறவியும் ஒன்று. மறுபிறவியை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் வெளியானாலும், அவற்றில் மறுபிறவியின் உண்மையையும், அதன் பின்னணி ரகசியத்தையும் ஆதாரத்துடன் இதுவரை யாரும் சொன்னதில்லை. அந்த வகையில், பூர்வ ஜென்மம் பற்றிய உண்மைகளை ஆதாரத்துடன் நிரூபிக்கும் வகையில் உருவாகியுள்ளது 'ஆன்மீக அழைப்பு' திரைப்படம்.