பெங்களூரு: காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் கடந்த 28ம் தேதி மண்டியா மாவட்டத்தில் உள்ள பெவினஹள்ளியில் ‘மக்களின் குரல்’ பேரணியில் பங்கேற்றார். அவரை உற்சாகமூட்டும் வகையில் காங்கிரஸார் மலர்களை தூவி வரவேற்றனர்.
அப்போது மகிழ்ச்சி அடைந்த டி.கே.சிவகுமார் 500 ரூபாய் நோட்டுகளை மேளக் கலைஞர்கள் மீது வீசினார். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் மண்டியா மாவட்டத்தின் ஆட்சியர் கோபால கிருஷ்ணா வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மண்டியா ஊரக போலீஸார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.