சிட்னி,
பிரபல ஆபாசப் பட நடிகை ஏஞ்சலா ஒயிட் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேற்று கிரகவாசிகள் குறித்த கேள்விகள் நம்மை சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது.
இதற்கிடையே வேற்று கிரகவாசிகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி அதிர வைத்துள்ளார் பிரபல ஆபாசப் பட நடிகை ஏஞ்சலா.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஏஞ்சலா ஒயிட், வேற்று கிரக வாசிகளுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒன்லி ஸ்டான்ஸ் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தவிர வேறு பல கேள்விகள் குறித்தும் அவர் விளக்கியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஏலியன்களுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. அதில் எனக்கு இப்போது ஆர்வமும் இல்லை. வேறு வேறு பூமிகளைச் சேர்ந்த உயிரினங்கள் உடலுறவு கொள்வதில் தவறில்லை. ஏலியன்களுடன் உடலுறவு கொள்வது எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்” என்றார்.
அதற்கு நெறியாளர், “ஒரு நாள் இதற்கான பதில் நமக்குக் கிடைக்கும். ஏலியன் எப்போதாவது பூமிக்கு வந்தால், நீங்கள் ரெடியாக இருங்கள்” என்று விளையாட்டாகக் கூறினார்.
அதற்கு ஏஞ்சிலா மேலும் கூறுகையில், “இந்த வாழ்க்கையில் என்னால் முடிந்த அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார்.
ஏஞ்சிலா அந்த நேர்காணலில் ஆபாசப் பட துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள் குறித்தும் பேசினார்.
குறிப்பாக 2013-ல் ஒரு ஆபாசப் படத்தில் நடிக்கும் போது கிட்டதட்ட உயிரிழக்கும் நிலையில் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.