சென்னை : நானி நடிப்பில் நேற்று வெளியான தசரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பான் இந்திய திரைப்படமான தசரா படத்தில், நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.
கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நானியின் தசரா
தசரா திரைப்படம்.தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாதியில் அப்பாவி இளைஞனாக வரும் நானி இரண்டாம் பாதியில் ரத்தக்களறி முகத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட ரக்கட் பாயாக மாறி திரையரங்கையே அலறவிட்டுள்ளார்.
தசரா கதை
தெலங்கானாவில் உள்ள வீரப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் ஆண்களின்வேலையே குடிப்பது தான். இந்த காட்சியில் ரியலாக தெரிய வேண்டும் என்பதற்காக நானி உண்மையிலேயே சில காட்சிகளில் குடித்துவிட்டு நடித்தேன் என்று ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். கடும் உழைப்போட்டு நடித்த அந்த காட்சிகளில் நானியின் நடிப்பு மெச்சும்படி இருந்தது.
அதிரடியான கதைக்களம்
அந்த ஊரில் இருக்கும் சில்க் பார் வெறும் பார் மட்டுமில்லாமல், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அந்த பாரில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்த ஊரில், தான் தரணி (நானி), சூரி (தீக்ஷித் ஷெட்டி) வெண்ணிலா (கீர்த்தி சுரேஷ்) ஆகியோர் நண்பர்களாக உள்னனர். இதில் சூரி,கீர்த்தி சுரேசை காதலிப்பதை தெரிந்து கொண்டு, நண்பனுக்காக காதலை விட்டு கொடுத்து விடுகிறார் நானி. ஆனால், இவர்கள் வாழ்க்கையில் விதி விளையாட சூரி கொலை செய்யப்படுகிறார். சூரியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
முதல் நாள் வசூல்
நேற்று திரையரங்கில் வெளியான நானியின் தசரா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நானியின் திரைவாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படம் இந்தியாவில் சுமார் 38 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக, திரைப்பட வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.