சென்னை : நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான படம் தசரா. ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது தசரா. இந்தப் படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு காணப்பட்டது.
அந்த எதிர்பார்ப்புகளை படம் தற்போது சிறப்பாக பூர்த்தி செய்து சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது.
தசரா படம்
நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, சாய்குமார், தீக் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் நேற்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ளது தசரா படம். இந்தப் படத்திற்கு முன்னதாக மிகச்சிறந்த எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் சிறப்பாக பூர்த்தி செய்து முதல் நாளிலேயே சிறப்பான வசூலை பெற்றுள்ளது. சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
சிறப்பான பிரமோஷன்கள்
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள தசரா படம் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சிறப்பான பிரமோஷன்களை படக்குழுவினர் செய்திருந்தனர். குறிப்பாக நானி மற்றும் கீர்த்தி இருவரும் அதிகமான பிரமோஷன்களில் ஈடுபட்டனர். பேட்டிகளும் கொடுத்திருந்தனர். மும்பையில் நடைபெற்ற படத்தின் பாடல் வெளியீட்டில் கீர்த்தி சுரேஷ் சரக்கு பாட்டிலுடன் காணப்பட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்பு அதில் கூல்டிரிங்க்தான் இருந்தது என்பதையும் படக்குழுவினர் வெளிப்படுத்தினர்.
ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப்படத்தின் மச்சினி பாடல் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலை பல பிரபலங்கள், ரசிகர்கள் ரீல்சாக செய்து தங்களது சமூக வலைதளங்களில் பகிர்நது வருகின்றனர். இந்தப் படத்தை ஸ்ரீலக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் முதல் நாளில் மட்டுமே இந்திய அளவில் இந்தப் படம் 38 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
கேக் வெட்டி கொண்டாட்டம்
இதனிடையே படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்கள் கிடைத்து வருவதையொட்டி நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்றைய தினமே கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். முதல் நாளிலேயே படத்தின் சக்சஸ் பார்ட்டியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான வசூலை தசரா பெற்றுள்ளது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
சிறப்பான கதைத்தேர்வு
புஷ்பா படத்தை போலவே தசரா படத்திலும் நானியின் லுக் கரடுமுரடாக அமைந்திருந்தது. இதனால் அந்தப் படத்தின் காப்பியாக படம் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் முறியடித்து தான் எப்போதுமே தனித்துவமான கதைத்தேர்வில் சிறந்தவன் என்பதை மீண்டும் நானி நிரூபித்துள்ளார். அவரது அடுத்தடுத்த படங்களின் வெற்றி அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் முதல் நாளிலேயே சிறப்பான வசூலை குவித்துள்ள தசரா, மேலும் அதிகமான வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.