சென்னை : நடிகை தர்ஷா குப்தா, வரி குதிரை காஸ்ட்யூமில் அசத்தலான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா பதிவிடும், புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகை தர்ஷா குப்தா
கோயம்புத்தூரில் பிறந்த தர்ஷா குப்தா, படிக்கும்போதே நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு சில விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார். விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்து, சின்னத்திரையில் வாய்ப்பை பெற்றார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில், முள்ளும் மலரும் சீரியல் இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது.
அடுத்தடுத்த படங்களில்
இதைத்தொடர்ந்து, மின்னலே, செந்தூரப் பூவே போன்ற சில சீரியல்களில் நடித்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு நடிக்க மட்டுமில்லை சமைக்கவும் தெரியும் என்பதை நிரூபித்தார். தொலைக்காட்சியில் அசத்தி வந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஜிமோகன் இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட்டின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது யோகி பாபுவின் படமான மெடிக்கல் மிராக்கில் படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் தர்ஷா குப்தா. தொடர்ந்து வீடியோக்கள், பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள், போட்டோஷுட்கள் என்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போதுமே கலர்புல்லாகவே இருக்கும். அந்த அளவிற்கு ஃபுல் எனர்ஜியோடு இவர் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்து இருக்கிறார்.
வரி குதிரை காஸ்ட்யூமில்
தற்போது தர்ஷா குப்தா, வரி குதிரை காஸ்ட்யூமில் அசட்டகாசமான போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். வழக்கமாக அழகான தமிழில் கேப்ஷனை போடும் தர்ஷா குப்தா, இந்த புகைப்படத்திற்கு, மற்றவர்கள் உன் மீது வீசும் கற்களை, உனக்கான படிக்கற்களாக மாற்றிக்கொள் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், லைக்குளை குவித்து வருகின்றனர்.