எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 16வது சீசன் ஐபில் தொடர் மார்ச் 31 முதல் தொடங்குகிறது. இந்த போட்டிகளை நாம் நேரலையில் வீட்டில் இருந்தே தொலைக்காட்சி அல்லது OTT மூலமாக கண்டுகளிக்கலாம். இந்த வருடம் நாம் Disney+ Hot Star மூலம் ஐபில் போட்டிகளை பார்க்கமுடியாது.
ஐபில் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கவேண்டும் என்றால் நாம் Star Sports மூலம் பார்க்கலாம். அதேநேரம் OTT அல்லது ஆன்லைன் மூலமாக பார்க்க நினைத்தால் Jio Cinema சென்று பார்க்கவேண்டும். இதுவரை நாம் ஆன்லைன் மூலம் பார்க்க Hotstar ரீசார்ஜ் செய்து பார்க்கவேண்டும்.
தற்போது முதல் மறையாக நாம் இலவசமாக OTT பயன்படுத்தி ஐபில் போட்டிகளை பார்த்து ரசிக்கலாம். கடந்த ஆண்டு நடந்த ஐபில் ஒளிபரப்பு ஏலத்தில் 20,500 கோடிக்கு Viacom 18 நிறுவனம் உரிமையை வாங்கியது. மேலும் முதல் முறையாக பல மொழிகளில் இந்த போட்டிகளை காணலாம்.
எப்படி பார்ப்பது?
Jio Cinema மூலமாக நாம் நேரலையில் 4K Resolution மூலமாக போட்டிகளை காணமுடியும். இதில் பல கேமரா கோணங்கள் இருப்பதால் நமக்கு பிடித்த கேமரா கோணத்தில் போட்டிகளை காணலாம். இலவசமாக Multi-Cam வசதியுடன் நாம் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கலாம்.
இந்த போட்டிகளுக்கு நாம் எந்த ஒரு பணமும் செலவழிக்க தேவையில்லை. உங்களின் ஸ்மார்ட்போனில் Jio Cinema app Install செய்து பார்க்கலாம். மொத்தமாக English, Tamil, Hindi, Telugu, Marathi, Gujarati, Bhojpuri, Bengali என 12 மொழிகளில் போட்டிகளை காணலாம். தொலைக்காட்சிகளில் நாம் பல மொழிகளில் போட்டிகளை பார்ப்பதை போலவே OTT மூலமாகவும் பல மொழிகளில் காணலாம்.
Jio 3GB Data திட்டம்
ஐபில் போட்டிகளை பார்ப்பதற்கே ஜியோ நிறுவனம் இந்தியாவில் 219ரூ, 399ரூ, 999ரூ என மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் நமக்கு கூடுதலாக 40 GB டேட்டா கிடைக்கிறது. மேலும் ஒரு நாளைக்கு 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் வசதி, SMS மற்றும் 5g வசதிகள் கிடைக்கின்றன.
219 ரூபாய் திட்டம் மூலமாக 14 நாட்களுக்கு 2GB டேட்டா Add on வசதி கிடைக்கிறது. இதில் 399 ரூபாய் திட்டம் 28 நாட்களுக்கு 6GB Add on வசதி கிடைக்கிறது. இதன் 999 ரூபாய் திட்டத்தில் 40GB டேட்டா Add-On கிடைக்கிறது. ஐபில் தொடங்குவதால் மக்கள் போட்டிகளை தடையின்றி பார்ப்பதற்கு இந்த திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்