சென்னை : சிம்புவின் பத்து தல திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் படக்குழு வெளியிட்டுள்ளது.
மாநாடு,வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சிம்பு மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார்.
கிருஷ்ணா இயக்கி உள்ள இப்படத்தில் கௌதம் கார்த்தி,கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சிம்புவின் பத்து தல
வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடற்பயிற்சி செய்து இருபது வயது இளைஞர் போல வந்த ரசிகர்களின் ஹாட் பீட்டை எகிற வைத்தார் மும்பை கேங்ஸ்டர் கதை அம்சத்தைக் கொண்ட இத்திரைப்படம் சிம்புவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது. வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு மீண்டும் பத்து தல படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார்.
அதிரடி கேங்ஸ்டர்
பத்து தல படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்து அதிரடி காட்டி உள்ளார். கேங்ஸ்டார் படம் என்றால் நிச்சயம் அதிரடி அரசியலும் இருக்கும். அந்த வகையில், அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிறார் சிம்பு. அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக இருக்கும் சிம்பு இருப்பதால், துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் சிம்புவை தீர்த்து கட்ட ஒருபக்கம் திட்டம் போடுகிறார்.
பத்து தல கதை
ஒரு பக்கம் சிம்புவை தீர்த்து கட்ட சதி நடக்க மறு பக்கம், சிம்புவை கையும் களவுமாக பொறிவைத்து பிடிக்க ரகசிய போலீசாக கௌதம் கார்த்திக் அந்த கேங்கில் சேர்ந்து விடுகிறார். சிம்புவிற்கு எதிரான ஆவணங்களை திரட்டி போலீசில் ஒப்படைத்து விடுகிறார். இறுதியில் சிம்புவிற்கு என்ன ஆனது என்பதுதான் பத்து தல படத்தின் கதை.
அதிரடி மாற்றங்கள்
கன்னடத்தில் வெளியாகி வெற்றி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் என்பதால், இப்படதின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த படத்தின் கதையைப் போன்றே இந்த படம் இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு இப்படத்தில் சில அதிரடி மாற்றங்களை இயக்குநர் செய்துள்ளார். இதுவே இந்த படத்திற்கு பிளஸாக மாறி உள்ளது.
முதல் நாள் வசூல்
இந்நிலையில், பத்து தல படத்தின் முதல் நாள் வசூலை குறித்த தகவலை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலித்து உள்ளதாக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வார நாள் அதுமட்டுமின்றி அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்ட போதும், இவ்வளவு வசூலை அள்ளி உள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்,