சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் போது, இது தமிழர்களின் பெருமை, சோழர்கள் வரலாறு என ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தை கலாய்த்து ப்ளு சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவானதால், இதனை சோழர்களின் வரலாறு, தமிழர்களின் பெருமிதம் என ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ப்ளு சட்டை மாறன் ட்வீட்
இதனிடையே பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தை ப்ளு சட்டை மாறன் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
வடிவேலு மீம்ஸ்
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி ரொம்பவே பிரபலம். அதில், காமெடி நடிகர் சாம்ஸை ஏமாற்றி பணம் பறிக்கும் வடிவேலு, அதனை தனது சகாக்களுடன் பங்கு போடுவார். அந்த இமேஜில் வடிவேலுவுக்கு பதிலாக மணிரத்னம் அவருடன் விக்ரம், கார்த்தி ஆகியோரின் போட்டோவை வைத்து மீம் கன்டென்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
முட்டு தர முடியாது
அதில், “இங்க பாரு மணி, இந்த தடவை எல்லாம் தமிழர்களின் அழிக்க முடியாத பெருமை, மறைக்கப்பட்ட சோழனின் வரலாறு, கடம்பூர் மாளிகை ரகசியம் தெரியுமா உனக்கு? அப்படி இப்படி என முட்டு தர முடியாது. படம் போர் அடிக்காம இருக்கணும்” என கன்டென்ட் இடம்பெற்றுள்ளது. இதனுடன் மணிரத்னம், கார்த்தி, விக்ரம் ஆகியோரின் காமெடியான இமேஜும் நெட்டிசன்களிடம் வைரலாகி வருகிறது.
விரைவில் ப்ரோமோஷன்
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லஷ்மி, ஷோபிதா துலிபலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், விரைவில் ப்ரோமோஷன் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.