சென்னை : இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, விதவிதமான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு லைக்குளை அள்ளி வருகிறார்.
வாட்டசாட்டமான உடல்வாகு, பார்த்தவுடன் சுண்டிஇழுக்கும் அழகு, என ரசிகர்களை தனது அழகால் கட்டிப்போட்டு வைத்து இருப்பவர் ஷாலு ஷம்மு
இவர் நடித்தது என்னவோ ஒரு சில படங்கள் தான் என்றாலும், அம்மணியை சோஷியல் மீடியாவில் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர் மிகவும் பிரபலம்
நடிகை ஷாலு ஷம்மு
சிவகார்த்திகேயன், சூரி, சத்யாராஜ் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் ஷாலுவை பார்த்தால், ஷாலுவா இது என்று நமக்கே சந்தேகம் வரும் அளவுக்கு எலும்பும் தோலுமாக இருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
படவாய்ப்பு இல்லை
இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார். அதன்பின், இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார்.
இணையத்தில் படு ஆக்டிவ்
நடிகை ஷாலு ஷம்மு 817K பாலோவர்களை அதிகரிக்க இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தாண்டவம் ஆடி வருகிறார். இவர் ஒரு காதலர் தினத்திற்கு தனது முன்னழகை பூங்கொத்தால் மறைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அது மட்டுல்லாமல் ஆண் நண்பர்களுடன் இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் அழகை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் பலர் இவர் பாலோ செய்யத் தொடங்கினர்.
ஒரே சலிப்பாக இருக்கு
இந்நிலையில், நடிகை ஷாலு ஷம்மு, விதவிதமான போட்டோவை வீடியோவாக வெளியிட்டு, ஒரே சலிப்பாக இருக்கு என்று பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு ஷாலு செல்லம் என்ன சலிப்பு என்றும், நாங்க இருக்கிறோம் என்றும் ரசிகர்கள் பதறிப் போய் கேட்டுவருகின்றனர்.