Viduthalai: விடுதலையில் 'ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ்' ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயை கொண்டாடும் ரசிகர்கள்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் தங்கை மகள் பவானிஸ்ரீ. இவர் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷின் தங்கை ஆவார். இசை குடும்பத்தில் பிறந்த பவானிஸ்ரீக்கு இசையை விட சினிமா மீதுதான் தீராக் காதல். சிறு வயதிலேயே இசைத்துறையில் அவரை சேர்த்து விட்ட போதும், நடிப்பிலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Viduthalai: ஹீரோவாக அப்ளாஸை அள்ளும் ‘விடுதலை’ சூரி.. திணறடிக்கும் க்ளிக்ஸ்!

இதையடுத்து மாடலிங் நடிப்பு என கவனம் செலுத்தி வந்த பவானிஸ்ரீ தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தில் நடித்துள்ளார். விடுதலை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. நகைச்சுவை நடிகரான சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோவாக தடம் பதித்துள்ளார்.

இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதியும் பவானிஸ்ரீயும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Vijay Yesudas: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய் யேசுதாஸ் வீட்டிலும் நகைகள் கொள்ளை.. பரபரப்பு!

இந்நிலையில் பவானி ஸ்ரீயின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பிரபல விமர்சகரான பிரசாந்த ரங்கசாமி பவானிஸ்ரீயின் நடிப்பை ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ் என பாராட்டியுள்ளார். மேலும் தனது கேரக்டருக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். பிரசாந்த் ரங்கசாமியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களும் பவானிஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தனது நடிப்பை பாராட்டிய பிரசாந்த் ரங்கசாமிக்கு நன்றி கூறியுள்ளார் பவானிஸ்ரீ. பவானிஸ்ரீ விடுதலை படத்தில் மலை வாழ் கிராம பெண்ணாக அவர்களுக்கே உரிய உடல் மொழியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

Viduthalai Review: இந்திய சினிமா கண்டிராத ஒன்று… விமர்சகர்களின் பாராட்டு மழையில் விடுதலை!

இதனிடையே விடுதலை படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ள பவானிஸ்ரீ, அந்த நாள் வந்துவிட்டது! இந்த அற்புதமான பாத்திரத்தை எனக்கு அளித்து விடுதலை உலகிற்கு அழைத்துச் சென்ற வெற்றிமாறன் சாருக்கு வெறும் நன்றி மட்டும் போதாது.

மற்றும் முழுக் குழுவின் கடின உழைப்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி! #Viduthalaipart1 இன்றிலிருந்து உங்களுடையது! என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.