சென்னை : அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி உள்ள திரைப்படம் விடுதலை. இதில் சூரி நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த வெற்றிமாறன் மீண்டும் ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார.
இரண்டு பாகமாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த மக்களின் கருத்தை பார்க்கலாம்.
சூரியின் நடிப்பு சூப்பர்
விடுதலை படம் பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளனர். படம் பார்த்த கூல் சுரேஷ், 1947ல் விடுதலை என்ற வார்த்தையை கேள்வி பட்டு இருக்கிறேன் அதன்பிறகு 2023ல் விடுதலை என்ற வார்த்தையை கேட்கிறேன். அந்த காலத்தில் விடுதலை என்ற வார்த்தையை கேட்டதும் மக்கள் மகிழ்ந்தார்களோ இப்போதும் அந்த வார்த்தையை கேட்டு மகிழ்சி அடைகிறார்கள். கருப்பு கமலஹாசன் என்றால் விஜய் சேதுபதி என்று உலகத்திற்கே தெரியும் அவரின் அட்டகாசமான நடிப்பு பிளஸ் இளையராஜா இசை என படம் அட்டகாசமாக உள்ளது என்றார். அதே போல சூரி இந்த படத்தில் சிறுத்தை மாறி,யானை மாறி நடித்திருக்கிறார் என்றார்.
அழுகையை அடக்க முடியல
விடுதலைப்படத்தில் பல காட்சிகளில் அடக்க முடியாத அளவுக்கு அழுகை வந்தது. குறிப்பா போலீஸ் ஸ்டேஷனில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சி, பெண்களை நிர்வாணப்படுத்தி அடிக்கும் காட்சியை பார்க்கும் போது ரொம்ப எமோஷனலாக இருந்தது. நிர்வாண காட்சி இருப்பதால் குடும்பத்தோடு பார்க்கலாமா என பலர் கேட்கிறார்கள். நிச்சயம் இந்தப்படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் என்றார் படம் பார்த்த ஒரு இளம் பெண்.
விடுதலை இரண்டாம் பாகம் எப்போது?
இந்த மாதிரி ஒரு கதையை நான் எதிர்பார்க்கல, அதிலும் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இப்படி ஒரு கேரக்டரில் நடித்து அசத்துவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க அவ்வளவு அழகா நடிச்சு இருக்கிறார். விடுதலை இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற எதிரபார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றிமாறனின் தனி பாணி
விடுதலை படம் வெற்றி மாறனின் வழக்கமான பாணியில் படம் சூப்பரா இருக்கு, வடசென்னை, அசுரன் படத்தை விட இப்படத்தில் வசனத்தில் மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறார். படம் மெதுவா போனாலும், மார்டன் டிரெண்டுக்கு ஏற்றபடி பிஜிஎம் இருந்தது. காமெடியான நடித்து வந்த சூரியை, திடீரென ஹீரோவாக மாறினால் மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், நல்ல நடிப்பால் மனம் அதை ஏற்றுக்கொண்டது. விடுதலை படத்தின் மீது நல்ல எதிர்காலம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார் வெற்றிமாறன்.