எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
விடுதலை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
விடுதலைவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். Aishwarya Rajinikanth: மொத்தம் 200 பவுன் நகைய காணோம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்!
விமர்சனங்கள்இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். தொடரும் துரோகங்கள்.. அசராத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சூரி அற்புதமான நடிப்புஅந்த வகையில் ட்ரேட் அனாலிஸிஸ்ட்டும் திரைப்பட விமர்சகருமான ரமேஷ் பாலா பதிவிட்டுள்ள டிவிட்டில், விடுதலை பார்ட் 1 முதல் பாதி : இதுவரை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது என்றும் டைரக்டர் வெற்றிமாறன் அவர் வழியில் இருக்கிறார்.. சூப்பர். சூரி அவரது கதாபாத்திரத்தில் அவ்வளவு கண்ணியம்.. அற்புதமான நடிப்பு.. என பாராட்டியுள்ளார். இளையராஜாவின் பின்னணி இசை சூப்பர். விஜய்சேதுபதி இண்டர்வெலுக்கு முன்பாகதான் வருகிறார். பவானிஸ்ரீ நன்றாக நடித்துள்ளார். இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Pathu Thala Review: காலா பட ரஜினி போல… சிம்புவின் பத்துதல படத்தை இன்ச் பை இன்சாக விமர்சித்த பயில்வான்!
சூரி செம்மஇதேபோல் விமர்சகர் லக்ஷ்மிகாந்த் பதிவிட்டுள்ள டிவிட்டில், விடுதலை முதல் பாதி என ஒரு ஸ்டார் பதிவிட்டுள்ளார். மேலும் வெற்றிமாறன் ஒருபோதும் இம்ப்ரஸ் செய்ய தவறுவதில்லை. சூரி செம்ம. பவானி ஸ்ரீ மற்றும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். லொகேஷன் மற்றும் உருவாக்கம் டாப். அறிமுகம் ஒரே ஷாட்.
மெதுவான விவரிப்பு ஆனால் முற்றிலும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. விஜய் சேதுபதிக்கான பில்ட்அப்ஸ் சூப்பர்.
இரண்டாம் பாதியில், கதை இப்போது தொடங்குகிறது சூப்பர் என குறிப்பிட்டுள்ளார்.
Sarath Babu: திடீர் உடல் நலக்குறைவு… நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி!
கதையின் நாயகர்களின் காலம் !மேலும் லக்ஷ்மி காந்த் பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில், சூரி செம்ம பொருத்தம்.. அவரது அப்பாவித்தனம் மிகவும் இயல்பாக இருந்தது. நேர்மையான காவலராக பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ள டிவிட்டில், விடுதலை இண்டர்வெல்- அந்த இடத்தின் கதை மற்றும் புவியியல் ஆகியவற்றில் ஆழ்ந்துவிட்டேன். இதுவரை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும் இது கதையின் நாயகர்களின் காலம் ! என்றும் மனதையும் காதையும் இம்சிக்காத தேனாய் பின்னணி இசை! என்றும் விடுதலை படத்தை குறிப்பிட்டுள்ளார்.
Pathu Thala: நரிக்குறவர் மக்களை அனுமதிக்க மறுப்பா? குவியும் கண்டனங்கள்.. ரோகிணி தியேட்டர் விளக்கம்!
முதல் பதினைந்து நிமிடங்கள்இதேபோல் விமர்சகர் ராஜசேகர் பதிவிட்டுள்ள டிவிட்டில், விடுதலை முதல் பாதி – காவியத் திரைப்படத் தரத்தை மீண்டும் வெற்றிமாறன் வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் விபத்தின் பின்விளைவுகளை உள்ளடக்கிய முதல் பதினைந்து நிமிடங்கள் இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று! பிரம்மாண்டம் என்பது பளபளக்கும் செட் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மட்டுமல்ல, திரையில் பாதிக்கப்பட்டவர்களின் ஆழமான உணர்ச்சிகள், கஷ்டங்கள், கொடூரமான வன்முறை மற்றும் வலி ஆகியவற்றை நம்பவைத்து வெளிப்படுத்தும் விதம் உண்மையிலேயே விதிவிலக்கானது! அரசியல் ரீதியாக அவர் எப்போதும் சமநிலையானவர்! அதை விரும்புகிறேன்.. என சூப்பர் ஈமோஜியை குறிப்பிட்டுள்ளார்.
Pathu Thala Review: சிம்புவின் பத்து தல படம் எப்படி? விமர்சகர்களின் அதிரடி விமர்சனம்!
உலகத்தரம் வாய்ந்ததுமேலும் அவர் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், விடுதலை முதல் பாதி – ரயில் விபத்துக்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை உலகத்தரம் வாய்ந்தது. சூரி மனிதாபிமான காவலர் சிறந்தவர். காவல்துறை, அரசு அமைப்பு மற்றும் அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை விரிவாகக் காட்டியிருக்கிறார்வெற்றிமாறன் ! டிஓபி வேல்ராஜுக்கு பாராட்டுக்கள், அவரது கேமரா கோணங்களும் பிரேம்களும் சூப்பர் என பாராட்டியுள்ளார். விடுதலை படம் விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருவது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Ponniyin Selvan 2: வஞ்சகம் தீர்க்கும் கண்கள்… ‘பொன்னியின் செல்வன் 2’ ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள்!
Viduthalai Review