எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தன்னைப் பற்றி கேட்ட குழந்தையை நடிகர் விஜய் வீடியோ காலில் பார்த்து பேசி கொஞ்சிய வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய்தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகராகவும் உள்ளார் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது.
Viduthalai: விடுதலையில் ‘ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ்’ ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயை கொண்டாடும் ரசிகர்கள்!
லியோகடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் நடைபெற்று வந்த முதல் ஷெட்யூல் நிறைவடைந்து இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் இந்தப் படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் உள்ளார். 30 க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைல் தற்போது விஜய் வைத்துள்ள ஹேர் ஸ்டைலைதான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
Viduthalai: ஹீரோவாக அப்ளாஸை அள்ளும் ‘விடுதலை’ சூரி.. திணறடிக்கும் க்ளிக்ஸ்!
விஜய் மனைவியுடன் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வந்த நாள் முதல் தற்போது வரை நடிகர் விஜய் குறித்து நாள்தோறும் ஏதாவது ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று வைரலானது. அதில் தனது மனைவியுடன் சேர்ந்து தோசை சுட்டு சாப்பிட்டார் விஜய்.
Shruti Haasan: காதலருடனான அந்தரங்க போட்டோவை ஷேர் செய்த ஸ்ருதி ஹாசன்!
விஜய் வீடியோ கால்இந்நிலையில் நடிகர் விஜய்யின் புதிய வீடியோ ஒன்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அதாவது ரசிகரின் குழந்தை ஒருவர், என்ன விஜய் அங்கிள் வரமாட்டீங்களா என கேட்டுள்ளார். இதனை அறிந்த நடிகர் விஜய் அந்த ரசிகருக்கு வீடியோ கால் செய்து அவருடைய மகளுடன் பேசியுள்ளார். அதில் அந்த பெண் குழந்தையிடம் ஸ்வீட்டாக நலம் விசாரிக்கும் நடிகர் விஜய், ரொம்ப க்யூட்டா இருக்கீங்க என்று கொஞ்சி கொஞ்சி பேசுகிறார்.
Viduthalai Review: இந்திய சினிமா கண்டிராத ஒன்று… விமர்சகர்களின் பாராட்டு மழையில் விடுதலை!
கொஞ்சிய விஜய்அதற்கு அந்த குழந்தை நீங்களும் ரொம்ப க்யூட்டா இருக்கிங்க அங்கிள் என்கிறது. பின்னர் சாப்டீங்களா என்று விஜய் கேட்க, தோசை சாப்பிட்டேன். நீங்கள் சாப்டீங்களா அங்கிள் என மழலை மொழியில் நடிகர் விஜய்யை குதூகலிக்க செய்துள்ளார் அந்த சுட்டிக் குழந்தை. நடிகர் விஜய் தன்னைப் பற்றி கேட்ட குழந்தையை வீடியோ காலில் பார்த்து கொஞ்சி பேசிய இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Ponniyin Selvan 2: ‘பொன்னியின் செல்வன் 2’ பேரழகி குந்தவையாக த்ரிஷா.. அசத்தல் க்ளிக்ஸ்!
குழந்தைகளின் ஃபேவரைட்இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வரும் விஜய் ரசிகர்கள், குழந்தைகளின் ஃபேவரைட் எங்களின் விஜய் அண்ணாதான் என கொண்டாடி வரருகின்றனர். நடிகர் விஜய்க்கு பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளே அதிக ரசிகர்களாக உள்ளனர். அதற்கு காரணம் நடிகர் விஜய்யின் நகைச்சுவை உணர்வும், அவரது நடன திறமையும்தான். மேடைகளில் பேசும் போது கூட என் நெஞ்சில் குடியிருக்கும் என்று ஆரம்பிக்கும் விஜய், தனது குட்டி குட்டி ரசிகர்களையும் மறக்காமல் நினைவு கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Aishwarya Rajinikanth: மொத்தம் 200 பவுன் நகைய காணோம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்!
விஜய் வீடியோ
Vijay Video Call