பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கடுமையான போராட்டம்!

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் சென்னையும் இரண்டாவது விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரம்பூர் பகுதிகள் அமைய உள்ளது. இதற்கு ஏகநாதபுரம், பரந்தூர் 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் 248 வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ … Read more

கலாஷேத்ரா பாலியல் புகார்கள் | காவல் துறை ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக சீமான் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழ்நாடு அரசு இனியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்குத் துணைபோகாமல், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நிரந்தரப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களை விரைந்து கைது செய்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் … Read more

ரெட்மி நோட் 12, 12சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: சியோமி இந்தியா சார்பில் ரெட்மி நோட் 12 சீரிஸ் போன்களில் நோட் 12 4ஜி மற்றும் நோட்ட 12சி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் … Read more

விடுதலை: வெற்றிமாறன் ஒரு பேராசிரியர்; உச்சி முகர்ந்த திருமாவளவன்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள விடுதலை திரைப்படம் குறித்து தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் பொல்லாதவனில் தொடங்கிய இயக்குநர் வெற்றி மாறனின் பயணம் தற்போது விடுதலை படம் வரையில் தொட்ர்ந்து வருகிறது. பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் ஆகிய படங்களில் தனிநபர்களின் வாழ்க்கை முறையை, முரண்களை, மோதல்களை பேசிய வெற்றிமாறன், வட சென்னையில் மண்ணின் மக்களுக்கு நிகழக்கூடிய அரசியலை பேசியவர், அசுரன் படத்தில் சாதி கொடுமையால் ஏற்படும் அவலங்களை பேசினார். விடுதலை இந்தநிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் மக்களையும், … Read more

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ஆறு வாரத்தில் மட்டும் விமான பயணத்திற்காக 500,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளது தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் விமான சேவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்டர் விடுமுறைக்கு செல்லவிருக்கும் நிலையில், தற்போது ரிஷி சுனக் செலவிட்ட தொகை தொடர்பில் தகவல் கசிந்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் எகிப்து, பாலி, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்தார். @getty மொத்தம் 6 வாரங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த பயணங்களுக்காக தனியார் விமான சேவையை … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் கலாக்ஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கலாக்ஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதாகக் கூறி மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவி அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து கலாஷேத்ரா கல்லூரியைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட … Read more

5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு: அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

நாகர்கோவில்: அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக அம்மா சிமென்ட் திட்டம் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டது. தமிழக அரசு மாதம் 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்தது. பல்வேறு சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.185க்கு கொள்முதல் செய்யப்பட்டு அவை அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு பை ரூ.190க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வீடுகளை நிர்மாணிப்பதில் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க 100 சதுர … Read more

சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்குவங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின் உயிரிழப்பு தொடர்பாக வேளச்சேரி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!!

டெல்லி: டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிய 6 பேர் கொசு விரட்டி மருந்தை சுவாசித்ததால் உயிரிழந்தனர். கொசு விரட்டியை எரித்ததில் வெளியான கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

அம்ரித்பால் நெருங்கிய கூட்டாளி பஞ்சாபில் கைது | Close associate of Amritpal arrested in Punjab

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வரும் நிலையில், அவரது நெருங்கிய கூட்டாளி கைது செய்யப்பட்டார்.பஞ்சாபில், ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் வாயிலாக, மத தீவிரவாத பிரசாரத்தில் அம்ரித்பால் சிங் ஈடுபட்டு வந்தார். மேலும், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கும் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கைது செய்யப்பட்ட தன் ஆதரவாளரை மீட்க, காவல் நிலையத்துக்குள் நுழைந்து, அம்ரித்பால் சிங் வன்முறையில் … Read more