போப் பிரான்சிஸ் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி

ரோம், போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை சீராகி வருகிறது என்றும், இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவார், என வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரும் வாரம் நடைபெறும் புனித வார நிகழ்வுகளில் போப் பங்கேற்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் … Read more

மோடி இதுவரை 23 பொதுத் துறைகளை நிறுவனங்களை விற்றுள்ளார் – முத்தரசன் தாக்கு

மோடி இதுவரை 23 பொதுத் துறைகளை நிறுவனங்களை விற்றுள்ளார் – முத்தரசன் தாக்கு Source link

கோவை : பணம் தரல.. நிர்வாணமா வீடியோ எடுத்து பரப்புவோம் – இளம்பெண்ணுக்கு மிரட்டல்.! 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதேபகுதியில் அழகுநிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் அழகு நிலையத்தில் இருந்த போது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் அங்கு வந்தனர். அங்கு அவர்கள் அந்த பெண்கள் இளம்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் பணம் தரவில்லையென்றால் உன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் … Read more

ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை!!

தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அவர் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 23 புதிய அறிவிப்புகளை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டுள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சென்னை மற்றும் மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்பின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும். தமிழ்நாடு … Read more

டெல்லி: நோயாளிகளிடம் நூதன மோசடி செய்த டாக்டர் – ஒரு மாதமாக கண்காணித்து தூக்கிய புலனாய்வு பிரிவு!

டெல்லியில் டாக்டர் மணீஷ் ராவத் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மணீஷ் ராவத் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒருமாத காலமாக கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மார்ச் 10 மணீஷ் ராவத்தின் உதவியாளர் அவ்னேஷ் படேல், என்பவர் கல்யாண்புரியில் வசிக்கும் சிம்ரன் கவுர் என்ற பெண்ணைத் தொடர்புகொண்டு, அவரது கணவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை தேவை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. ரூ.1.15 லட்சத்தை வங்கிக் … Read more

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் | மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நிறைவு: தமிழ்நாடு மகளிர் ஆணையம்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவிகளிடம் நடத்திய விசாரணை மற்றும் அவர்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து வரும் திங்கள்கிழமை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறியும், சம்பந்தப்பட்ட … Read more

ஆஸ்கர் விருது வென்ற ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற ‘எலிஃபன்ட்விஸ்பரர்ஸ்’ படக் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது அவர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். தமிழ்நாடு வனப்பகுதியில் தாயை இழந்த யானைக்குட்டிக்கும் அதைவளர்த்தவர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்குவதாக இந்தப் படம் அமைந்தது. குனீத் மோங்கா தயாரித்த இந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தியாவில் தயாரான ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இதுதான் முதல் … Read more

நரிக்குறவர் சர்ச்சை: U/A சான்றிதழ்.. ரோகிணி தியேட்டர் விளக்கம்.. பொளக்கும் நெட்டிசன்கள்.!

ரோகிணி தியேட்ட சர்ச்சை கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகின. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிலும் இந்த திரைப்படம் வெளியாகியது. அப்போது, அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக கையில் டிக்கெட்டுகளுடன் சென்ற நரிக்குறவர் குடும்பங்களை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. டிக்கெட் இருந்தாலும் நீங்கள் எல்லாம் உள்ளே செல்லக்கூடாது எனக் கூறி அவர்களை ரோகிணி திரையரங்க நிர்வாகத்தினர் விரட்டினர். அப்போது அங்கிருந்தவர்கள், எதற்காக அவர்களை உள்ளே விட … Read more

Kannika Snehan: கன்னிகா சினேகன் வீட்டுக்கு வந்த புது உறவு: தீயாய் பரவும் வீடியோ.!

பிரபல பாடலாசிரியர் சினேகன் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் கன்னிகா சினேகன் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழ் சினிமாவில் 700 க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளவர் கவிஞர் சினேகன். கமல் … Read more

இலங்கையில் மற்றுமொரு பெண் மர்மமான முறையில் படுகொலை

இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெல்மடுல்ல – புலத்வெல்கொட பகுதியிலுள்ள வீடொன்றில் 40 வயதுடைய சட்டத்தரணியான துஷ்மந்தி அபேரத்ன என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். கொலை செய்யப்படுதற்கு முதல்நாள் இரவு உயிரிழந்த பெண் குடும்பத்தாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி … Read more