மெக்சிகோவில் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து.. டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் கருகி சேதம்!
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து நேரிட்டது. எகாடெபெக்-கில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென பற்றிய தீ ஆலை முழுவதும் பரவியதால், டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் கருகி சேதமடைந்தன. இதில், அடர்த்தியான கரும்புகையும் தீ பிழம்புகளும் பல மைல் தூரத்திற்கு வானில் பரவியது. தீ விபத்தின் போது ஆலையில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். Source link