தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பள்ளி குழந்தைகள்..!!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதன்படி, திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், நகராட்சி நிர்வாகத்துறை மூலம் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய பணிகளை முதல்வர் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை… யார் யாருக்கு கிடைக்கும்?!

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுளை நெருங்கும் நிலையிலும் அதற்கான அறிவிப்பை திமுக அரசு வெளியிடாமல் இருந்தது விமர்சனத்துள்ளாக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதுச்சேரி  அரசு இந்தத் திட்டத்தை அறிவித்தது திமுக அரசுக்கு கூடுதல் நெருக்கடியாக அமைந்தது. இந்த நிலையில், வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருப்பது … Read more

மதச்சார்பற்ற கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கலாம்: டி.ராஜா கருத்து

புதுச்சேரி: மதச்சார்பற்ற கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் புதுச்சேரியில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடந்தது. நேற்று தேசியக்குழுக் கூட்டம் நடந்தது. அதன்பிறகு டி. ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவதே முக்கியம். ஆகவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். ஒன்றுபட்ட கூட்டணியால்தான் … Read more

கங்கா விலாஸ் கப்பலின் முதல் பயணம் திப்ருகரில் நிறைவு

திப்ருகர்: உலகின் மிக நீளமான நதிவழி சொகுசு கப்பல் என்று அழைக்கப்படும் எம்.வி. கங்கா விலாஸ் கப்பலின் முதல் பயணம் நேற்று திப்ருகரில் நிறைவடைந்தது. திப்ருகர் வந்தடைந்த கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘எம்.வி. கங்கா விலாஸ்’ என்கிற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு கப்பல், நதி வழியாக இயக்கப்படும் உலகின் நீளமான சொகுசு கப்பல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி … Read more

தமிழ்நாட்டில் மீண்டும் இடைத்தேர்தல் : ஓபிஎஸ்ஸுக்கு காத்திருக்கும் பேராபத்து -அடித்து ஆடும் எடப்பாடி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உருவாகி வருவதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. ஆபத்தை உணராத ஓபிஎஸ்ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமான நிலையில் அடுத்தடுத்த அடிகளை ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்துவிட வேண்டும் என துடிக்கிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாக தெரியவில்லை என்கிறார்கள். ஓபிஎஸ் கடிதம்!பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு … Read more

அமைச்சரை விட மருத்துமனை இயக்குனர் பெரியவரா? பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 29-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி 28ம் தேதியன்று பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. மத்திய பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு… மாணவ மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்க சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி நடைபெறாததால் வாக்குவாதங்கள் வலுத்தன. அமைச்சர், எம், பி,. சட்டமன்ற உறுப்பினரை விட தகுதி குறைவானவரை அழைத்து பட்டங்களை வழங்குவதா? என துணைவேந்தர் குர்மீத் சிங்குடன் வாக்குவாதம் … Read more

ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழிவுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ”ஜூலியட்” புயலின் தாக்கத்தினால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாட்ரிட் அருகே உள்ள குவாடலஜாரா நகரம், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைந்துபோய் உள்ளது. முக்கிய சாலைகள், இருப்பு பாதைகள், வானுயர்ந்த கட்டடங்கள் என எங்கு பாத்தாலும் பனி படர்ந்து காணப்படுகிறது. பனிப்புயலை தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  … Read more

முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி ஆளுநர் ஆளுநர் ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்தில், நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஏப்.1ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பாஜகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக முதல்வர் திரு @mkstalinஅவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!,’என்றார்.