கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் வெப்பம்

டெல்லி : கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பம் மிகுந்ததாக காணப்பட்டது. 1877ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

போக்குவரத்து சேவைகள்

போக்குவரத்து சேவை வழமையான முறையில் இடம்பெறவுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து வழமையான முறையில் இடம்பெறும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்துள்ளார். வழமையான முறையில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் இன்று ரயில் போக்குவரத்து இடம்பெறும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று பகல் 12 மணியளவில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை ரயில்வே தலையகத்திற்கு அருகில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிலதிபருக்கு வர வேண்டிய 90 லட்சம் ரூபாயை வசூலிக்க உதவிய ‘ChatGPT’ செயலி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த கிரேக் ஐசென்பர்க் என்ற தொழிலதிபருக்கு அவரது வாடிக்கையாளர் ஒருவர் 90 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. இதை அவர் செலுத்தாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். இதையடுத்து, பணத்தை வசூலிக்க ‘ChatGPT’ செயலியின் உதவியை கிரேக் ஐசென்பர்க் நாடினார். பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வரும் வாடிக்கையாளரை கடுமையாக எச்சரிக்கும் வகையில், வாக்கிய அமைப்புகளுடன் கடிதம் ஒன்றை ‘ChatGPT’ செயலி தயாரித்து தந்தது. இந்த கடிதத்தை மின்னஞ்சல் வாயிலாக கிரேக் ஐசென்பர்க் அனுப்பியதுடன், அந்த வாடிக்கையாளர் … Read more

தாய்ப்பால் புகட்டுவதால் மார்பகப் புற்றுநோயில் இருந்து தப்பலாம்! | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 10

இன்றைய காலகட்டத்தில், ‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு, பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். சென்ற … Read more

போதை விபத்தை தவிர்க்க முயன்ற லாரி உரிமையாளர்.. அபராதம் விதித்த போலீசார்..! நீதிமன்றம் வரை சென்று சாதித்தனர்..!

சேலம் தொப்பூர் காட்டு பகுதியில் லாரிகளை நிறுத்தி மதுஅருந்திக் கொண்டிருந்த ஓட்டுனர்களை ஜிபிஎஸ் மூலம் அடையாளம் கண்டு , லாரியின் உரிமையாளர் போலீசில் ஒப்படைத்த நிலையில் போதையில் வாகனம் ஓட்டியதாக அவர்களுக்கு விதிக்கப்பட்ட 22 ஆயிரம் ரூபாயை லாரி உரிமையாளரிடம் வசூலிக்க முயன்றதால் அவர் நீதிமன்றம் முன்பு தர்ணா செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. குடிபோதையில் லாரிகளை இயக்கும் ஓட்டுனர்களால் பல்வேறு கோர விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில் தனது லாரிகளை போதையில் ஓட்டிய இரு ஓட்டுனர்களை, … Read more

நாமக்கல் | லாரி மீது கார் மோதி தாய், மகள் உட்பட 5 பெண்கள் உயிரிழப்பு: 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தாய், மகள் உட்பட 5 பெண்கள் பரிதாபமாக உயிழந்தனர். படுகாயமடைந்த 4 வயது சிறுமி மற்றும் கார் ஓட்டுநர்நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் ரவி (45). இவர் தனது மனைவி கவிதா (43) மற்றும் கவிதாவின் தம்பி உதயக்குமாரின் மகள் லக் ஷனா (4) ஆகியோருடன் சென்னையில் இருந்து காரில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட மோர்பாளையம் … Read more

மத்தியபிரதேசத்தில் சிறார் ஆபாசப் படங்கள் வெளியீடு – 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் கைதாக வாய்ப்பு

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் ஆன்-லைனில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறார் ஆபாசப் படங்களை வெளியிட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மையம் கண்டறிந்துள்ளது. இந்த வழக்குகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய காணாமல் போன மற்றும் ஏமாற்றப்பட்ட குழந்தைகளுக்கான மையம் (என்சிஎம்இசி) அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் அந்த மாநிலத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்-லைனில் சிறார் ஆபாசப் படங்களை வெளியிடுதல், ஆன்-லைனில் பாலியல் தூண்டுதல் … Read more

தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்த மகள்

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண், தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்த தந்தை உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரை சேர்ந்தவர் ஜான் (60). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் … Read more

ம.வெங்கடேசன்: மீண்டும் அழைத்த டெல்லி… பதவி பிளஸ் பாஜகவின் தமிழக அரசியல் கணக்கு!

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ராஜஸ்தானை சேர்ந்த அஞ்சனா, உறுப்பினராக கேரளாவை சேர்ந்த பி.பி.வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ம.வெங்கடேசனுக்கு மீண்டும் பதவி இவர்களின் பதவி வரும் 2025 மார்ச் 31 வரை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் ம.வெங்கடேசன் கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் … Read more