அடேங்கப்பா..இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி, சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு பின், மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்ந்துள்ளது. முன்னதாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 6 ஜூலை 2022 முதல் ஒரே நிலையில் தான் இருந்துள்ளது. அதேசமயம், வர்த்தக சிலிண்டர்களின் நுகர்வோர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஏனெனில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.350 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் … Read more

குழந்தைகள் எழுதிய கோரிக்கை மனுவை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், இல்லத்தரசிகள், சிறு குறு தொழில் செய்பவர்கள் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி நாட்டின் எதிர்கால தூண்களான குழந்தைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதில் சிறந்து விளங்குகிறார்.  மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர் பெரியளவில் நன்மைகளை செய்து வருகிறார், தொண்டர்கள் கொண்டாடும் தலைவர் என்றல்லாமல் குழந்தைகள் கொண்டாடும் தலைவராகவும் விளங்குகிறார்.  இவரது கொள்கையை குழந்தைகள் ஏற்று செயல்படுத்தும் அளவிற்கு குழந்தைகள் மத்தியில் இவருக்கு மவுசு அதிகமுள்ளது.  இலங்கையில் நடந்து வரும் … Read more

முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு Z+ பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு., முழு செலவையும் ஏற்பது யார்?

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் குடும்ப உறுப்பினர்களுக்கு உயர்நிலை Z+ பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னணி பணக்காரர் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் 9,240 கோடி அமெரிக்க டாலர் ஆகும், மேலும் இந்தியாவில் அதிக வரி கட்டும் நபர் என்றாலும் முகேஷ் அம்பானி தான். Twitter  சமீபத்தில் முகேஷ் அம்பானி மற்றும் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

கீழடியில் அருங்காட்சியகம் வரும் 5ம் தேதி முதல்வர் திறக்கிறார்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.18 கோடியில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வரவேற்பறை, மினி தியேட்டர் உள்ளிட்ட 10 கட்டிட தொகுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 6 தொகுதிகளில் 2 தளங்களில் கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. வரும் 5, 6ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அரசுப்பணி ஆய்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். 5ம் தேதி மாலை கீழடி வரும் அவர்,  … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி!!

சென்னை:70வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ 70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர்  திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதல்வர் சிசோடியா ராஜினாமா: அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் விலகல்

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதே போல, சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை கடந்த 2021ல் அமல்படுத்தியது. இதில் மதுபான உரிமங்களை வழங்குவதிலும், மதுபான பார்களின் ஒதுக்கீட்டிலும் பல முறைகேடுகள் நடந்ததாக … Read more

மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு| A case has been registered against the teacher who hit the student with a bamboo stick

தானே, மஹாராஷ்டிராவில், 14 வயது மாணவனை அடித்ததாக எழுந்த புகாரையடுத்து, மதரசா பள்ளி ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மத கல்வியை கற்றுத் தரும் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நவ., மாதத்தில், 14 வயது மாணவன் ஒருவன், பாடத்தை மனப்பாடம் செய்யாததால், 32 வயதான ஆசிரியர் பிரம்பால் அடித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், இப்பள்ளியை நடத்தும் தர்காவில் முறையிட்டனர். இதையடுத்து … Read more

சினிமா பார்த்தால் சிறை வடகொரியா எச்சரிக்கை| If you watch the movie, you will be jailed in North Korea

பியாங்யாங் : வட கொரியாவில் ஹாலிவுட் படங்களை பார்க்கும் குழந்தைகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு பெற்றோர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா ஒரு மர்ம பிரதேசமாகவும் இரும்புத்திரை போர்த்திய நாடாகவும் உள்ளது.இங்கு நடக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். இங்கு அதிபர் கிம் ஜோங் உன் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மேற்கத்திய நாடுகளின் படங்களை தடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நாடு … Read more