தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள்.. ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து.!

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதன் காரணமாக திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 70 பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ … Read more

மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த எலான் மஸ்க்..!!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார். இந்த நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் திடீரென வீழ்ச்சியடைந்ததால், எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சரிந்தன. இதன் காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். தற்போது ஃபோர்ப்ஸ் வார இதழ் … Read more

விழுப்புரம்: திருமணம் மீறிய உறவை தவிர்த்ததால்… பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருக்கு ராஜா என்பவருடன் திருமணமாகி (தம்பதியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது), 19 வருடங்கள் ஆகும் நிலையில், 18 மற்றும் 16 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜா கடந்த 7 வருடமாக சவுதியில் பணி செய்து வந்துள்ளார். இதன் இடைப்பட்ட காலத்தில்  ராணிக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான முபாரக் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. முகநூல் விழுப்புரம்: கணவனை இழந்த பழங்குடியினப் பெண் தற்கொலை; பாலியல் … Read more

ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்கள் தொடக்கம்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, முதல்வர் பேசியதாவது: திமுக ஆட்சி அமையும் முன்பே நான் கூறியபடி, பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர், கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி … Read more

2047-க்குள் வளர்ந்த தேசமாக மாற தொழில்நுட்பம் பேருதவி புரியும் – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த தேசமாக உருவெடுக்க தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திறன் வெளிப்படுத்தல்; தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியது: சிறு நிறுவனங்கள் தொழில் விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்யும் செலவினங்களை குறைக்க அரசு விரும்புகிறது. எந்தவிதமான செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டுத் தருமாறு தொழில் நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். இதுவரை … Read more

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது – அமெரிக்கா புகழாரம்

வாஷிங்டன்: தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் மட்டும் 153 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. … Read more

HBD CM MKS: திராவிட நாயகன் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்! வாழ்த்துகள்!

சென்னை: தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், உலகத்தலைவர்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக  மற்றும் முதலமைச்சரின் நண்பர்கள், சினிமாத் துறையினர், தொழில்துறையினர் என பலரும் கலைஞர் கருணாநிதி மகன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திமுக தொண்டர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் … Read more

3 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றிருப்பதால் அரசுப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு அமைச்சர்களுடன் அவசரமாக ஆலோசனை நடத்திய பசவராஜ் பொம்மை, முக்கிய சேவைகள் பாதிக்கக் … Read more

அடிப்படை தேவையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு! பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருந்துகளே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி  பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, அதிக விலைக்கு விற்கப்படும் எரிபொருள் போன்ற பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் அவதிப் பட்டு வருகின்றனர். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவோ அல்லது உள்நாட்டு உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவோ இயலாத நிலை உள்ளது. … Read more